மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்; அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வில் ஆப்சன்ட் போட்ட விவகாரம் தொடர்பாக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகம் குறித்து…

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வில் ஆப்சன்ட் போட்ட விவகாரம் தொடர்பாக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகம் குறித்து தவறான செய்திகள் வெளிவருகின்றன. தாமதமாக வந்த மாணவர்களின் விடைதாள்கள் கூட திருத்தி வெகு விரைவில் முடிவுகள் வெளிவரும். மாணவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சர்வதேச அளவில் பாட திட்டங்கள் தரம் உயர்த்த முதலமைச்சர் பாடுபட்டு வருகிறார் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சர்வதேச அளவில் பாட திட்டங்கள் தரம் உயர்த்ததான், நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் நேரடி தேர்தவுகள் தான் நடைபெறும், அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும், அந்த அளவுக்கு அதிகமானோர் அரசு பள்ளிக்கு வருவார்கள் என்று பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக வெளிவந்த தகவல் தவறு. இன்னும் ஒரு வார காலத்தில், மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.