மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடும் மாணவர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வருடந்தோறும் மாணவர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் அந்த மாநிலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து ஜெய்ப்பூரில் கல்லூரி ஒன்றில் நடந்த மாணவர் சங்க தேர்தலால் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் மாணவர்கள் ஓட்டுப்போட வந்த மாணவிகளின் காலில் விழுந்து ஓட்டு கேட்டுள்ளனர். இதில் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாணவர் ஒருவர் மாணவ-மாணவிகளின் கால்களில் விழுந்து ஓட்டு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இம்மாநிலத்தில் ஏ.பி.வி.பி., மற்றும் என்.எஸ்.யூ.ஐ ஆகிய இரு மாணவர் அமைப்பு மாணவர்களும் சிலர் சுயேச்சையாகவும் போட்டி போட்டு உள்ளனர் . அதன் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.