முக்கியச் செய்திகள்

தாஜ்மஹால் நிலம் எங்களுடையது: பாஜக எம்.பி.

தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது என்று பாஜக எம்பி தியாகுமாரி தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலில் சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த அறைகளில், இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, அந்த 20 அறைகளை திறக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி மாவட்டத்தின் பாஜக ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மே 4ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்துப் பேசிய ராஜஸ்தானின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி, தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க ராஜகுடும்பம் தயாராக உள்ளது. எங்களது நிலத்தை ஷாஜகான் கையகப்படுத்தினார். அந்த காலத்தில் நீதிமன்றம் இல்லாததால், அந்த நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியாது. பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே விஷயங்கள் தெளிவாகும்.

தாஜ்மஹாலில் உள்ள அறைகள் ஏன் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல அறைகள் அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்”என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி

Halley Karthik

இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை

Saravana Kumar