மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ்7 தமிழின், அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு ’கோல்டன் டிக்’ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஊடகத்துறையில் பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்துடன் இயங்கி வரும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மக்களின் மனம் கவர்ந்த ஊடகமாக திகழ்ந்து வருகிறது. நியூஸ்7 தமிழின் அன்புப் பாலம் மூலம் எளிய மக்களுக்கு அன்புப் பாலமாக இருந்து எண்ணற்ற சாதனைகளை படைத்து வருகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலகிராம், ஷேர்சேட், யூடியூப் போன்ற பல்வேறு சமூக ஊடக பக்கங்களின் மூலம் உண்மைத் தன்மையுள்ள செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது.
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செய்திகளை வழங்கும் நியூஸ்7 தமிழுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், நியூஸ்7 தமிழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு ’கோல்டன் டிக்’ கிடைத்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு, நீலம், சாம்பல் மற்றும் கோல்டு ஆகிய மூன்று நிறங்களில் டிக்குகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டிலும் களைகட்டியது விஷூ மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!
அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கணக்குகளுக்கு நீல நிற டிக் வழங்கப்படுகிறது. அரசாங்கத்திற்குச் சொந்தமான கணக்குகள் மற்றும் ட்விட்டர் நிறுவனம் மூலம் கண்காணிக்கப்படும் கணக்குகளுக்கு சாம்பல் நிற டிக் வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் வணிக ரீதியிலான கணக்குகளுக்கு கோல்டன் டிக் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 22 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டு முதலிடம் வகிக்கும், நியூஸ்7 தமிழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்/கணக்கிற்கு ’கோல்டன் டிக்’ அங்கீகாரத்தை ட்விட்டர் நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது. அதேபோல், நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ், நியூஸ்7 தமிழ் அக்ரி, நியூஸ்7 தமிழ் ஹெல்த் ஆகிய பக்கங்களுக்கும் ’கோல்டன் டிக்’ அங்கீகாரம் வழங்கி கவுரவித்துள்ளது ட்வீட்டர் நிறுவனம்.







