மேலூர் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிகுட்பட்ட அலங்கம்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பொதுமக்கள் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.







