முக்கியச் செய்திகள் உலகம்

உலகின் மிகப்பெரிய தேனீ; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

உலகின் மிகப்பெரிய தேனீயை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1859ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் அரியவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டது. இது மற்ற தேனீக்களை ஒப்பிடும் போது அளவில் நான்கு மடங்கு பெரியதாக இருந்தது. இதன் உருவத்திலும் சில மாற்றங்கள் காணப்பட்டன. இந்த அரிய தேனீ இனத்திற்கு Megachile pluto என்று பெயர். ஆனால் அதன்பிறகு இந்த தேனீக்களை யாராலும் பார்க்க முடியவில்லை. இந்த இனம் அழிந்து விட்டதோ என்ற சந்தேகமும் பலருக்கு இருந்தது. அதனால் இந்த தேனீயை கண்டுபிடிப்பதற்காக 2018ம் ஆண்டு ஒரு குழு தயாரானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தோனேசியாவில் இந்த தேனீ இனம் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனால் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் புளூட்டோ தேனீ இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இனம் அழிந்து விட்டதென நினைத்த நிலையில், தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி என கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?

Halley Karthik

லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

EZHILARASAN D

அக்னிபாத் திட்டத்திற்கான அறிவிப்பாணை வெளியீடு

Mohan Dass

Leave a Reply