முக்கியச் செய்திகள் தமிழகம்

மதமாற்ற புகார் மீது கடுமையான நடவடிக்கை- தமிழ்நாடு அரசு

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவதாக வரும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் பொது நல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி “மனுதாரர் குறிப்பிட்ட திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தொடர்ந்து எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் நடந்ததாக எந்த புகாரும் இல்லை”என தெரிவித்தார்.

அவ்வாறு புகார் ஏதும் வந்தால் அரசு உடனடியாக எடுக்கப்படுவதாகவும், எந்தப் பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியபடி வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் வகுக்கக்கூடாது எனவும், அது அரசுக்கு என்ன சிரமம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது உரிமை அல்ல எனவும் கூறி, வழக்கை விரிவான வாதத்திற்காக நாளை தள்ளிவைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை

EZHILARASAN D

நயன்தாரா படத்தின் பாடல் நாளை வெளியீடு: அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்

G SaravanaKumar

விஜய் தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய லெஜன்ட் சரவணன்

Web Editor