மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து…

மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான  விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல நாட்களாக மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டினர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அவை மருத்துவ கழிவுகள் இல்லை என்றும்..  யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த தனியாக பயோ வேஸ்டேஜ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ்  தொலைக்காட்சியில்  செய்தி வெளியானது. நியூஸ் 7 தமிழ் செய்தியின் எதிரொலியாக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கண்காணிப்பாளர்கள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்

இந்த நிலையில்  மருத்துவமனையின் முதல்வர் ரேவதி உடன்  நியூஸ் 7 தமிழ் தலைமைச் செய்தியாளர் சுடலை குமார் நடத்திய கலந்துரையாடலில் அவர் தெரிவித்ததாவது..

”மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகம் அல்ல. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 150 முதல் 300 கிலோ மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு வருகிறது.

அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இருந்து தினமும் 100 கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.. மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்கள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.” என தெரிவித்தார்.

இது குறித்து நியூஸ் 7  தமிழின் தலைமைச் செய்தியாளர் நடத்திய முழு பேட்டியை  காண..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.