8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: இயற்பியல் ஆசிரியர் பணியிடைநீக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில்  இயற்பியல் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே அரசு…

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில்  இயற்பியல் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அருள்ஜீவன் (47). அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும்
ஒரு மாணவனுக்கு பாலியால் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

தனது மகனின் தோளில் கையைப் போட்ட ஆசிரியர் அருள்ஜீவன் ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவனை தகாத உறவுக்கு ஈடுபடுத்தியதாகவும், இதனால் மாணவன் வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து ஆசிரியர் அருள்ஜீவன் தலைமறைவானார். இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.