உள்ளாடையை காணவில்லை என்றும் தன்னை நிர்வாணமாக தாக்கியதாக கூறி ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த போதை ஆசாமியால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் மேல்சட்டை அணியாமல் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு அரைநிர்வாணமாக புகார் கொடுக்க வந்தார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆலங்குளம் அடுத்த நாலாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பதும் அவர் கட்டட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. பாலமுருகனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவருக்கு குடி பழக்கம் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று, ஆலங்குளம்
அடுத்த சிங்கம்பாறை கிராமத்திற்கு கட்டட வேலைக்கு போய்விட்டு இரவு பாலமுருகன் வீடு திரும்பியுள்ளார். பின்னர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி
குடித்ததும், அவருக்கு போதை தலைக்கேறி உள்ளது. இதையடுத்து, போதையில் காவல் நிலையம் சென்ற பாலமுருகன் கிராமத்தில் சிலர் தன்னை நிர்வாணமாக தாக்கியதாகவும், எனது உள்ளாட்டையை காணவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறியுள்ளார். மேலும் இதனை புகாராக பதிவு செய்யும் படி அடம் பிடித்தார்.
விசாரணைக்கு பின், போலீசார் பாலமுருகனின் மனைவிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதையடுத்து, அவரது மனைவி மாமியார் குழந்தைகளுடன் கிராமத்தில் இருந்து ஆட்டோவில் காவல்
நிலையத்திற்கு அவர்கள் வந்தனர். மனைவியுடன் வீட்டிற்கு போக மறுத்த பால முருகன், காவல் நிலையத்தில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தார். இதனால் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 1 மணிநேரமாக காவல் நிலையத்தில் சுற்றி திரிந்த பால முருகனை ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சமாதானம் செய்து, மனைவி குழந்தைகளுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.
உள்ளாடையை காணவில்லை என்று
புகார் கொடுக்க வந்த இளைஞரால் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சிரிப்பும்
பரபரப்பு ஏற்பட்டது.








