#STR48 காட்டு பசில இருந்த சிம்பு மீண்டும் ‘மன்மதன்’ பாணியில் களமிறங்குகிறாரா ? மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர்…

நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார். மணல் மாஃபியாவை
மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனையடுத்து நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சிம்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது சில மாதங்களுக்கு முன் நடிகர் சிம்பு ஒரு தனியார் இணையதளத்திற்கு அளித்திருந்த பேட்டியில் இடம் பெற்றிருந்த ஒரு பகுதியாகும். அதில் சிம்பு “நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால், திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன்.

அதிக கதைகள் வருகிறது. இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீனி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் உதாரணமா சொல்லனும்னா என்னுடைய ‘மன்மதன்’ படம் ஒரு காலத்துல எனக்கு இருந்த காட்டு பசிலதான் உருவானது. அதே மாதிரி இப்பவும் நானே இயக்கியோ அல்லது நல்ல கதைய சொல்லுற இயக்குநரை வச்சோ ஒரு நல்ல படத்தை கொடுக்கணும்னு நெனைக்கிறேன் ” என்று பேசியிருந்தார். இந்த வீடியோவானது வெளிவந்த அந்த சமயத்திலேயே வைரலான நிலையில், தற்போது மீண்டும் சிம்பு ரீபோஸ்ட் செய்திருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அந்த ட்விட் பதிவில் ‘Patience is a virtue. It took a lot of faith but it’s worth the wait’என கூறி #STR48 என்றும் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் சிம்புவின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த அவரது ரசிகர்கள், தற்போது அந்த ட்விட்டை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/SilambarasanTR_/status/1633049624096428034?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.