காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குலேபகாவலி, ஜாக்பாட் படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் கல்யாண். இவர் தற்போது கோஸ்டி படத்தை இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சீட் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் – நிர்வாகிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!
இந்நிலையில், ‘கோஸ்டி’ படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Get ready for the endless comedy, roller coaster ride 🥳🥳#Ghosty releasing in theatres on March 17th.
Starring @iYogiBabu and me 👻
A @samcsmusic Musical
@Kalyaandirector @Sudhans2017 @Jayaram_gj @seedpictures1 @ksravikumardir @editorvijay @jacobcamkid @DoneChannel1 pic.twitter.com/JVEyDOXmMb— Kajal Aggarwal (@MsKajalAggarwal) March 5, 2023
-ம.பவித்ரா







