பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும்” என எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு…

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும்” என எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன்பு பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் நீயூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில்,“ நாங்கள் மக்களை ஒரு புது உலகத்திற்குள் கொண்டு செல்கிறோம். இவ்வளவு பெரிய கதையைச் சுலபமாகப் புரிய வைக்க வேண்டும் என்ற பயம் இருந்தது. புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக அதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பது தான் சவாலாக இருந்தது. அதற்காகப் பொன்னியின் செல்வன் கதையின் மைய கருவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கதையில் வரும் சிறிய கதாபாத்திரங்களை மட்டுமே படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் 2 மணி நேரப் படத்திற்கு 50 மணி நேரக் காட்சிகள் எடுக்கப்படுவது வழக்கம். அது போலத் தான் பொன்னியின் செல்வன் படமும் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை முதலில் பார்க்கும் போது பெரிய நம்பிக்கை இருந்தது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் தொடக்கம் கதை இரண்டாம் பாகத்தில் வரும். படத்தில் இடம்பெற்றுள்ள போர்க் காட்சிகளை எடிட் செய்வது தான் சற்று கடினமாக இருந்தது.

பாகுபலி, போன்ற படங்களோடு பொன்னியின் செல்வனை ஒப்பீடு செய்வது சாதாரணம் தான். வெற்றி பெற்ற படங்களோடு மற்ற படங்களை ஒப்பிடுவது வழக்கம் தான்.
படத்தில் சில காட்சிகள் டெலிட் செய்யப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் இதற்குப் பிறகு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்து 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும்” என எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

–  நிருபன் சக்கரவர்த்தி 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.