மகளிர் ஆசியக்கோப்பை : இந்திய அணி வெற்றி

மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி20 போட்டியில், மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.   மகளிர் ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி…

மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி20 போட்டியில், மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

 

மகளிர் ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது போட்டியில் இந்திய அணி மலேசியா அணியை எதிர் கொண்டது. முதல் போட்டியில் விளையாடிய மந்தனா, பூஜா, ஸ்னேக் ராணா, ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதில், மேகனா, கிரண், மேக்னா சிங், ராஜேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றனர்.

 

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேகனா 69 ரன்களும், ஷெபாலி வர்மா 46 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் மலேசியா அணி விளையாட தொடங்கியது. போட்டி தொடங்கும் முன்பு மழைவரும் அறிகுறிகள் தென்பட்டதால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில், சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பயன்படுத்தினார். எதிர்பார்த்தது போல் 6-வது ஓவரின்போது மழை குறிக்கிட்டது. அப்போது, மலேசிய அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், மழை வரும் என தெரிந்து 5 ஓவர்களை விரைவாக வீசுவதற்கு முன்னுரிமை அளித்தோம் என கூறினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.