#RainAlert – வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானது!

ஆந்திரா அருகே வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை…

#Storm symbol formed in the Bay of Bengal!

ஆந்திரா அருகே வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையும் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் செப்.6, 7 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப்.6 முதல் செப்.9-ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக் கடலும், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலிலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.