கால்பந்து உலகில் புதிய மைல்கல்! 900 கோல்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார் #CristianoRonaldo

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் நபர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில்…

Cristiano Ronaldo became the first player in football history to score 900 goals.

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் நபர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். கால் பந்து உலகத்தில் அதிகமாகச் சம்பாதிக்கும் வீரர்களில் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுவர் தான் ரொனால்டோ. இவர் கால்பந்தைத் தாண்டி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

சமூகத் தளமான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் வைத்துள்ளார். அண்மையில் இவர் புதிதாகத் தொடங்கிய யூட்யூப் சேனலும் மிக விரைவில் அதிக சப்ஸ்க்ரைபர்களை பெற்றுள்ளது. தற்போது, அவரது UR Christiano யூட்யூப் சேனல் 50 மில்லியன் சப்ஸ்க்ரைபரை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : Madurai தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி! இன்று முதல் செப்.16 ஆம் தேதி வரை நடைபெறும்!

இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை. இந்த நிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார்.

தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இப்போட்டியில்தான் இவர் இந்த சாதனை படைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.