குக் வித் கோமாளி புகழுக்கு செப்டம்பர் 5-ம் தேதி டும்..டும்..டும்..

குக் வித் கோமாளி தொடர் மூலம் பிரபலமான புகழுக்கும் அவரது காதலி பென்சியாவுக்கும் செப்டம்பர் 5-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி…

குக் வித் கோமாளி தொடர் மூலம் பிரபலமான புகழுக்கும் அவரது காதலி பென்சியாவுக்கும் செப்டம்பர் 5-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் புகழ் பெற்றார்.

 

முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள புகழ், அடுத்ததாக Zoo keeper எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

நடிகர் புகழ், பென்சியா என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புகழ் – பென்சியா திருமணம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் புகழ் தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் என பதிவிட்டுள்ளார்.

இவர்களது திருமணத்திற்கு அச்சிடப்பட்ட அழைப்பிதழும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைப்பு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.