ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும் இது குறித்து விசாரிப்பதற்காகவும், கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்தும் ஆலோசனை நடத்துவதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 9.15 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருத்துகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும்போது சமர்பிக்கப்பட வாய்ப்புள்ளதாவும் கூறப்பபடுகிறது.







