மேற்கு வங்கத்தில் இன்று 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்க மாநிலத்தில் 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 3 லட்சத்திற்கும் மேலாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

மேற்கு வங்க மாநிலத்தில் 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 3 லட்சத்திற்கும் மேலாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.69 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும். தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1.92 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று உச்சத்தை அடைந்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் முர்ஷீதாபாத், மேற்கு வர்தமான் ஆகிய மாவட்டங்களில் தலா 9 தொகுதிகளும், தெற்கு தினாஜ்பூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் தலா 6 தொகுதிகளும், கொல்கத்தாவில் 4 தொகுதிகளும் என மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.