அவர் பெயர் ஜடேஜா… ரவீந்திர ஜடேஜா!

மா.நிருபன் சக்கரவர்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பழைய சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டியும் வருகின்றனர். கிரிக்கெட்டில் ஒரு அணியில் பந்துகளை…

  • மா.நிருபன் சக்கரவர்த்தி

சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பழைய சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டியும் வருகின்றனர்.

கிரிக்கெட்டில் ஒரு அணியில் பந்துகளை தடுத்து நிறுத்தும் தடுப்பு சுவர்களாக இருந்தவர்கள் என்று ஒரு சிலரை குறிப்பிடலாம். ஏனென்றால் உதிரியாக செல்லும் ஒரு ரன்கள், இரு ரன்களை கட்டுப்படுத்தினாலே போதும் அந்த ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். இலங்கை அணியில் அட்டபட்டு, ஜெயவர்தனே, இந்திய அணியில் அசாரூதின், ராபின் சிங், மொகமது கைப், ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியா அணியில் மைக்கெல் பவன், ஸ்டீவ் வாக். தென் ஆப்ரிக்கா அணியில் ஜான்டி ரொட்ஸ், குளுசுனர் எனலாம். இவர்கள்தான் எதிரணியின் 30 முதல் 40 ரன்களை கட்டுபடுத்துவர்கள்.

2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. அதிக விமர்சனத்திற்கு உள்ளாகாமல் கெளரவமான தோல்வியை தான் தழுவியது.

பொதுவாக உலகக்கோப்பை போட்டியில் தோல்வியடையும் அணியை அந்த நாட்டினர் வறுத்தெடுப்பது, வசைபாடுவது என்பது வாடிக்கையான ஒன்று. ஒரு முறை பாகிஸ்தான் தோல்விடைந்து நாடு திரும்பும்போது விமானநிலையத்தில் பலர் கூடி எதிர்ப்பை பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் சச்சின் என்ற நபரை தவிர்த்து மற்ற அனைவருக்குமே நிரந்தர இடம் என்பது கிடையாது. இக்கட்டான விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இந்திய அணியை அன்றைய தினம் சமாளிக்க உதவியது ஜடேஜாவின் ஆட்டமே எனலாம். 59 பந்துகளில் 4பவுண்டரி மற்றும் 4சிக்ஸர்களுடன் 77ரன்கள் எடுத்திருந்தார். கடைசி வரை இந்திய அணி வெற்றி பெறும் என தான் ரசிகர்கள் எண்ணியிருந்தனர் ஏனென்றால் ஜடேஜா ருத்ரடதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். முன்னாள் வீரர் மஞ்சுரேக்கர் ’தெருவில் ஆடும் கிரிக்கெட் வீரர் ஜடேஜா’ என்று விமர்சிருந்தார் ஆனால் குற்றச்சாட்டை தூள் தூளாக உடைத்து ஒரு வீரரின் திறமையின் அளவுகோலை மற்றவர்கள் தீர்மானிப்பது எப்படி? என சிதறடித்தார்.

ஒருவரின் தன்நம்பிக்கையை இழக்க செய்வதே மற்றவர்களின் விமர்சனம் தான் அதுவும் இந்திய அணியில் தாக்குபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, ஜடேஜா இந்திய அணிக்கு நீண்ட காலத்திற்கு பிறகு கிடைத்த ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் எனலாம்.

ஜடேஜா என்றதும் 90s Kids களுக்கு நினைவுக்கு வருவது அஜய் ஜடேஜாதான் ஆம், அந்த வசீகர பெயரை தாங்கி பிடித்ததாலோ என்னவோ ரவீந்திர ஜடேஜாவை அனைவருக்கும் பிடிக்க காரணமாக இருக்கின்றது.இந்திய அணியில் கபில்தேவ், ராபின்சிங், அஜய் ஜடேஜாவுக்கு பிறகு சிறந்த ஆல்ரவுண்டர்கள் இல்லாமலே இருந்தது.அவ்வாறு இருந்தபோது களமிறக்கபட்டவர்கள் தான் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களாக கடந்த ஆண்டுகளில் வலம் வந்தார்கள்.

8வது வீரராக களமிறங்கி உலகக்கோப்பை தொடரில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமை ஜடேஜாவிற்கு மட்டுமே சாரும்.பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அசத்தும் ஜடேஜா சில ஆட்டங்களில் சொதப்பி வந்தார். ஆனாலும் தனது ஃபார்மை நிரூபித்து கொண்டேதான் இருந்தார். 2020ஆம் ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியாவுடனான T20 போட்டிக்கான அணியில் ஜடேஜா பெயர் இடம்பெற்றிருந்தது. மீண்டும் ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அனைத்தையும் தகர்தெறிந்து தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டே இருந்தார்.

19வது ஐ.பி.எல் தொடரில் கதாநாயகனாக திகழும் ஜடேஜா ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் நான்கு கேட்சுகளை பிடித்து அசத்திய அவர், இன்றைய போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3விக்கெட்டுகள் மற்றும் 62ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். தற்போது அவரை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் ஆனால் மோசமான விமர்சனங்களை வைத்த மஞ்சுரேக்கரை வசைபாடியும் வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் அவரின் பீல்டிங்கை பார்த்து தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாண்டி ரோட்சுடன் ஒப்பிட்டு ட்விட் செய்து வந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய தூண் என ரவிந்திர ஜடேஜாவை கொண்டாடியும் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.