2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படை தேவைகளில் அரசு கவனம் செலுத்தியதாக தெரிவித்தார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:
- டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.
- நடப்பு நிதியாண்டிலேயே டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும்.
- மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன்.
இந்தியாவின் பொருதாளார வளர்ச்சி விகிதம் 9.2 % ஆக இருக்கும். - 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படை தேவைகளில் அரசு கவனம் செலுத்தியது.
- மக்களின் நிதி மக்களுக்கே நேரடியாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
- ஏர் இந்தியாவை விற்கும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துவிட்டது.
- நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்.
- அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பதுதான்.
- ஒமிக்ரான் அலையில் நாடு இருந்தாலும் தடுப்பூசி திட்டம் பெரும் பலனை அளித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








