சைதாப்பேட்டை தொகுதியில் அனைத்து மக்களுக்கும் தூய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துறைசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி மக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், சென்னை மேயராக தான் பணியாற்றிய போது ஏழை எலியோருக்கும் சுத்திகரிக்கபட்ட குடிநீர் கிடைக்க அம்மா குடிநீர் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு நடைமுறைக்கு கொண்டுவந்ததாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் காரணமாக ஒருசில பகுதிகளில் இந்த அம்மா குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப் பட்ட பின் தொகுதி மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.