முக்கியச் செய்திகள் தமிழகம்

மணிகண்டன் மரணம்; தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவர் மரண வழக்கில், தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, வாகன சோதனையின்போது, வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை கீழத்தூவல் காவல்நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக்கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி எஸ்.பாஸ்கரன், மாணவர் மரணம் தொடர்பாக தமிழக காவல்துறை தென்மண்டல ஐஜி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

IPL2021 – ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற சென்னை அணி!

Jeba Arul Robinson

புகார் அளித்தவரை தாக்கிய பாஜக பிரமுகர் மகன்கள்

Vandhana

கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு

Gayathri Venkatesan