முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – செந்தில்பாலாஜி

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடுகள் வாரியாகப் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக தெரிவித்த அவர் கணக்கெடுப்பின் பொழுது மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஒருவருக்குத் தோல்வி பயம் ஏற்படும்போது தான் கோபம் வரும் எனவும் அந்த நிலையில் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்தார். இனிவரும் காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசு மதுபானக் கடைகளை பொறுத்தவரை மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த மசோதாவிற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக் குறியான சட்டம் என முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்

Vandhana

ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்

Halley Karthik

அமமுக வேட்பாளர் தீவிர பரப்புரை!

Saravana Kumar