மாநில அரசே முடிவு செய்யலாம் – ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து எல்.முருகன் கருத்து!

ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே தடை குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தின் சார்பில், காலரா தடுப்புப் பணிகளில்…

ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே தடை குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தின் சார்பில், காலரா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம்
தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நோய்த் தடுப்பு பணிகளைப் பார்வையிட மத்திய இணை
அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
ஆகியோர் இன்று காரைக்கால் வருகை தந்தனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் வயிற்றுப் போக்கின் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கு பழம், பிரட் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், காரைக்கால் மாவட்டத்தில் காலரா தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் நோய்க் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்த கேள்விக்கு, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.