செஞ்சி அருகே தப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி தனியார் கல்லூரியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் கள் நல சங்கம் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் கலைநன்மணி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 5000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலை குழு சார்பில் தப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சத்தியராஜ், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் நாட்டுப்புற கலைஞர் கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாகக் கூறினார்.
தமிழ்நாட்டில், நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்கள் 5 பேருக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் அதை 1000 பேராக உயர்த்தி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
—-ம. ஸ்ரீ மரகதம்








