தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு, பயணிகள் போக்குவரத்தில் ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தெற்கு ரயில்வே 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான நிதியாண்டில் உற்பத்தி சரக்குகள் 3 கோடி 39 லட்சம் டன்கள் கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2 கோடி 74 லட்சம் டன் ஆக இருந்த சரக்கு போக்குவரத்து 24 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ரயில்வே வாரியத்தின் இலக்கான 3 கோடியே 22 லட்சம், இது 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை சரக்குரெயில் போக்குவரத்தில்
ரூ.3,230.40 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. தெற்கு ரெயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு பிரிவில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும், கடந்த 2022-23 நிதி ஆண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை, 58.26கோடி பயணிகளை சுமந்து, ரூ.5,779 கோடி வருவாயாக ஈட்டியுள்ளது. இதனிடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் கையாள, முன் பதிவு செய்யப்பட்ட, முன் பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களைபண்டிகை காலங்களில் இயக்கி வருகிறது.