“ஆரம்பிச்சாச்சு”… டப்பிங் பணிகளை தொடங்கிய #Viduthalai_2 படக்குழு!

விடுதலை – 2 திரைப்படத்திற்காக டப்பிங் பணிகள் படக்குழு துவங்கியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை…

விடுதலை – 2 திரைப்படத்திற்காக டப்பிங் பணிகள் படக்குழு துவங்கியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இவர்கள் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை – 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் டிச.20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், விடுதலை – 2 திரைப்படத்திற்காக டப்பிங் பணிகள் படக்குழு துவங்கியுள்ளது. இந்த பணிகள் இன்று துவங்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு இடையான காட்சிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.