விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், யூடியூபில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. டிரெய்லரை முன்வைத்து படத்தின் கதை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியாகும் விஜய் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் வெளியீட்டு நாளுக்காக காத்திருந்தனர்.இந்நிலையில் பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறி அந்த நாட்டில் இப்படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. குவைத் அரசு மிகவும் கடுமையான சென்சார் சட்டத்தை கொண்ட நாடாகும். அதே போன்று குரூப், எப்ஃஐஆர் போன்ற படங்களுக்கும் இதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.