விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிராசரத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மக்களிடம் இருந்து மனுக்களை பெறும் திமுகவின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 100 நாட்களில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களின் குறைக்கள் தீர்க்கப்படும் என அவர் உறுதி அளித்தார். அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால், மனுக்களை அளித்தபோது பெற்ற ஒப்புதல் சீட்டுடன், நேரடியாக கோட்டைக்கு வரலாம் எனவும் தெரிவித்த அவர், விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.







