ஊழியர்கள் வேலை நிறுத்தம்-ஸ்விகி விளக்கம்

புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், அந்நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய…

புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், அந்நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும் வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், புதிய விதிகளின் படி, எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ளதாகவும் ,மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்க தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டெலிவரி ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படும் புதிய ஊதிய வடிவத்தின் மூலம், ஸ்விகி ஆப்-ல் வரும் ஆர்டர்கள் எந்த வகையில் இருந்தாலும், டெலிவரி ஏஜெண்டுகள் போதுமான அளவுக்கு வருவாய் ஈட்டும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய முறையில் இருந்து அவர்கள் ஈட்டும் வருவாய் அல்லது வேலை செய்யும் நேரம் ஆகியவற்றில் பெரிய மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த புதிய மாற்றம் குறித்து நாங்கள் எங்களது டெலிவரி ஏஜென்டர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.