”டைட்டானிக்” ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதி

உலக புகழ் பெற்ற டைட்டானிக் பட ஹீரோயின் கேட் வின்ஸ்லெட் படபிடிப்பின் போது கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற டைட்டானிக் திரைப்படம் இதுவரை 11 ஆஸ்கர் விருதுகளை…

உலக புகழ் பெற்ற டைட்டானிக் பட ஹீரோயின் கேட் வின்ஸ்லெட் படபிடிப்பின் போது கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற டைட்டானிக் திரைப்படம் இதுவரை 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் பிரபலமாகினர்.

தற்போது, டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து எலன் குராஸ் இயக்கத்தில் ‘லீ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆண்டனி பென்ரோஸ் எழுதிய ‘தி லைஃப்ஸ் ஆஃப் லீ மில்லர்’ என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘லீ’ படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் படபிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.