முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பள்ளி மாணவிகள் தயாரித்த செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பறக்கிறது SSLV-D1 ராக்கெட்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ பயணத்தில் மூன்றாவது ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ள SSLV-D1 நாளை விண்ணில் பறக்க தயாராக உள்ளது.

 

இஸ்ரோவின் PSLV, GSLV உள்ளிட்ட ராக்கெட்டுகளைத் தொடர்ந்து சிறிய விண் ஏவுதல் வாகனமாக உருவாக்கபட்ட SSLV ராக்கெட் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை காலை 9.18 மணி அளவில் விண்ணில் செலுத்தபட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான சந்தையை வழங்கும் வகையில் SSLV ராக்கெட் உருவாக்கப்பட்டது.SSLV ஆனது PSLV மற்றும் GSLV ஆகியவற்றுக்கு பிறகு இஸ்ரோவின் மூன்றாவது ஏவுகணை வாகனமாகும். இஸ்ரோவின் புதிய ஏவுகணை வாகனமான SSLV க்கு புதிதாக உருவாக்கப்பட்ட திட பூஸ்டர் நிலையின் SS1 தரை சோதனை கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

 

சோதனையின் போது அனைத்து உந்துவிசை அளவுருக்களும் திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, SSLV – D1 120-டன் எடை கொண்ட இந்த மிகச்சிறிய ராக்கெட். மற்ற ராக்கெட் போல இல்லாமல் 72 மணிநேரத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. வழக்கமாக ஒரு ராக்கெட்டை வடிவமைக்க 60 பேர் வரை குறைந்தபட்சம் பணியாற்றும் நிலையில்
இந்த ராக்கெட்டை வடிவமைக்க 6 பேர் போதுமானதாக உள்ளது.மேலும் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

 

இது மட்டுமின்றி 1,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் முயற்சி மற்றும் சோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவை PSLV ராக்கெட்டுகளுக்கு மாற்றாக தற்காலத்தில் வழங்குகிறது. SSLV செயற்கைகோள் புவியின் பல்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த உதவியாகவும் ஒரு நேரத்தில் பல மைக்ரோசாட்லைட்களை ஏவுவதற்கு மிகவும் பொருத்தமானதாகவும்
வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் சோலார் பேனல்களின் செயல்திறனை ஆய்வு செய்ய அசாதிசாட்டில் செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தையும் இது ஆய்வு செய்யும். இந்த புதிய SSLV ராக்கெட்டில் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட AzaadiSat என்ற செயற்கைகோள் கொண்டும்,EOS 2 என்ற இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றையும் சேர்த்து விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இஸ்ரோவின் மிகச்சிறிய ஏவுகணை வாகனமான எஸ்எஸ்எல்வி டி-1 ஆனது, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து பெண் குழந்தைகள் குழுவால் 75 சிறிய மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 

இவை 8 கிலோ எடையுள்ள மைக்ரோசாட்லைட் ஆசாதி-சாட் செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.குறிப்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமப்புற அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளால் சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆசாதி சாட் எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர்.

 

சிறப்பம்சமாக அசாதிசாட் திட்டம், Space Kidz India என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் வடிவமைக்கப்பட்டது, இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து,இளம் பெண்களை விண்வெளி ஆராய்ச்சியைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் முன்னெடுப்பாக இந்த SSLV D1 இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

 

இஸ்ரோ வரலாற்றில் PSLV , GSLV வரிசையில் மூன்றாவது ராக்கெடாக முதன்முதலாக நாளை காலை 9.18 மணியளவில் விண்ணில் ஏவ ஏவப்படும் செயற்கைக்கோள் 13.3 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து சுமார் 356 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்

G SaravanaKumar

கூகுள் பாஸ்வேடை மாற்றுவது எப்படி?

Arivazhagan Chinnasamy

வரும் தலைமுறையினருக்கு தமிழ்பெயர் சூட்டுங்கள்: முதலமைச்சர்

EZHILARASAN D