செய்திகள்

தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மாெழி
இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல்
செப்டம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில், பள்ளி மாணவ, மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த
ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 -ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு
நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள
50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி
மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத் திட்டங்களின்
அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2023 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை
பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) 11ம் வகுப்பு மாணவர்களுக்கு
அக்டோபர் 1ஆ தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க இயலும். எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை
http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்
தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க
வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

G SaravanaKumar

ஈரோட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

Gayathri Venkatesan

‘சொமாட்டோ’ ஊழியரால் தாக்கப்பட்ட பெண் வாடிக்கையாளர்: வைரலான வீடியோ

Jeba Arul Robinson