முக்கியச் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இருமடங்கு உயர்த்தி அரசாணை வெளியீடு

நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய இளம் வயதில் வெற்றிகளைக் குவிக்கின்றனர். விளையாட்டு வீரர்களின் வலிமையும், ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவு செய்த பிறகு சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ. 3,000 இல் இருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
பிறப்பித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக அரசின் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் விளையாட்டுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

`ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

G SaravanaKumar

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்து மாற்றம்

Halley Karthik

ஆசிரியையை காலணியால் அடித்த காவலர்; வெளியான சிசிடிவி ஆதாரம்

G SaravanaKumar