ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட் – கோபைன் தொழிற்சாலையில் அமையவுள்ள 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட்…

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட் – கோபைன் தொழிற்சாலையில் அமையவுள்ள 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட் – கோபைன் தொழிற்சாலையின் புளோட் கிளாஸ் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை துவக்கி வைக்க உள்ளார். தமிழக முதல்வர் உடன் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு மற்றும் தமிழக சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசரன் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு விழா துவங்கியது செயின்ட் கோபைன் தொழிற்சாலை தலைமை செயல் அதிகாரி சந்தானம் பேசி வருகிறார். காணொளி மூலம் 3 திட்டங்கள் விளக்கம் அளிக்கப்பட்டது அதனை முதல்வர் பார்வையிட்டார். 1998 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் FLOAT GLASS PLANT துவக்கி வைக்கப்பட்டது அன்றைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இறையன்பு அவர்கள்தற்போது 2022 ஆம் ஆண்டு FLOAT GLASS PLANT மு.க ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது.


அன்றைய மாவட்ட ஆட்சியர் இன்றைய தமிழக தலைமை செயலாளர் செயின்ட் கோபைன் தலைமை செயல் அதிகாரி சந்தானம் பேசிய போது 3லட்சம் சதுரஅடியில் 60 ஆயிரம் மரங்களால் செயின்ட் கோபைன் நகர்ப்புற வனம் சிப்காட் மற்றும் தனியார் துணையுடன் அமைய உள்ளது. 2050 க்குள் கரிம வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்

இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது உலக தரத்திலான கண்ணாடி வளாக மையமானது இந்தியாவில் மீது குறிப்பாக தமிழகத்தின் மீது நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்பாடு எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.