தொடரும் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி மத்திய சிறையில் 7வது நாளாக இலங்கை தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை வங்காளதேசம்,ரஷ்யா,பல்கேரியா…

திருச்சி மத்திய சிறையில் 7வது நாளாக இலங்கை தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில்
தொடர்புடைய இலங்கை வங்காளதேசம்,ரஷ்யா,பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த
கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை அகதிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்கள் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி 7 வது நாளாக சுரேந்திரன்,அகில்தாஸ்,பிரணவன்,தரங்கன்,ஹரிஹரன்,நிசஹாந்தன்,  உதயகுமார் உள்ளிட்ட 7 இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து தண்டனையை
அனுபவித்து வெளியேறுவோம், ஆனால் எங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 3 ஆண்டுகள் இங்கேயே இருந்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறை தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.