எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது…

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆர்ப்பாட்டத்தில் அவருடன் 100 கணக்கான கட்சி பிறமுகர்கள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குச் சேலம் டவுன் போலீசாரிடம் அதிமுக கட்சியினர் அனுமதி வாங்கவில்லை . எனவே சேலம் டவுண் போலீசார் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, சாலையை மறித்தது, நோய்ப் பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் எடப்பாடி பழனிசாமி உட்பட்ட 100 மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.