உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை

உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல்…

உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்திய தொடர்பான காணொலி வெளியாகி அதிருப்தி ஏற்படுத்தியிருந்தது.


இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சலகேரியை சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடர் என்ற மாணவர் உக்ரைன் தலைநகரான கீவ்வில் நான்காமாண்டு மருத்துவம் படித்து வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும் போது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி தனது ட்விட்டர் பதிவில், “ஆழ்ந்த வருத்தத்துடன், இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அமைச்சகம் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது.கார்கிவ் மற்றும் பிற மோதல் மண்டலங்களில் உள்ள நகரங்களில் இருக்கும் இந்தியர்களை அவசரமாகப் பாதுகாப்பான பாதையில் கொண்டு செல்வதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த ரஷ்யா மற்றும் உக்ரைனின் தூதர்களை வெளியுறவுச் செயலர் தொடர்பு கொண்டுள்ளார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.