இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக எனவும், இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலத்திட்ட…

இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக எனவும், இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் “இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக திமுக இருக்கிறது. அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் இலங்கை தமிழர்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். முகாம் தமிழர்களுக்கு கோ ஆப் டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழ் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.