முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவகிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் நேற்று 8 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். தமிழக எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெகதாபட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

Arivazhagan Chinnasamy

கவுதம், சிம்பு இணையும் படத்தின் புதிய டைட்டில் வெளியீடு

Gayathri Venkatesan

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தல்-திமுக வேட்பாளர் வெற்றி

G SaravanaKumar