முக்கியச் செய்திகள் தமிழகம்

நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டார்.


மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்க வேண்டும் எனவும், நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் வலியுறுத்தினார். நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம் எனக் குறிப்பிட்டு அந்த முகவரியையும் அளித்துள்ளார்.

 

A. மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-

1. மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

​​வங்கி​​​​: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கி கிளை​​​: தலைமைச் செயலக கிளை,
சென்னை – 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு​​​: IOBA0001172
CMPRF பான் எண்​​: AAAGC0038F
UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள்.

B. காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-

The Joint Secretary to Government & Treasurer,
Chief Minister’s Public Relief Fund,
Finance (CMPRF) Department,
Secretariat, Chennai 600 009,
Tamil Nadu, India.

என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கலாம்.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்

Gayathri Venkatesan

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Dinesh A

காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம்

Web Editor