குஜராத் டைட்டன்ஸ் அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்கள்தான் இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சீசனில் அதிக கவனம் ஈர்த்து வருவது குஜராஜ் டைட்டன்ஸ் அணிதான். ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், ரஷித் கான் ஆகிய 3 பேர் மட்டுமே முதலில் ஏலம் எடுக்கப்பட்டனர். ஏலத்தின்போதுகூட இந்த அணி சிறப்பான கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், முதல் போட்டியில் இருந்து தொடர் வெற்றி மூலம் இந்த அணி கவனம் ஈர்த்து வருகிறது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான் ஆகியோர் சிறப்பாக பங்களித்து வருகின்றனர். பெளலிங்கில் முகமதுசமி, ஃபெர்குஷன், பாண்டியா, ரஷித், அலரி ஜோசப் ஆகியோரது கூட்டணி அசத்தி வருகிறது.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒருபோட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. 8 போட்டிகளில் 5 போட்டிகள் சேஸிங்கில் வென்றுள்ளனர். அதில் 5 மேட்ச்சும் இறுதி ஓவரில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 2 போட்டிகளில் கடைசி பாலிலேயே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில், குஜராஜ் அணி தனது 10வது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த முறை இந்த இரண்டு அணிகளும் மோதியபோது ராகுல் திவேதியா கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் விலாசி த்ரில் வெற்றியைத் தேடித் தந்திருந்தார். குஜராஜ் அணியைப் பொருத்தவரை சேஸிங்கில் கலக்கி வருகிறது.
வரும் ஒவ்வொரு நெருக்கடியையும் சமாளித்து வருவதில்தான் அந்த அணியின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நெருக்கடியையும் குஜராத் அணி சமாளித்து இந்த சீசனின் மிகச் சிறந்த அணியாக கலக்கி வருகிறது.
எனவே, இன்றைய போட்டியிலும் முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
களமிறங்கவுள்ள போட்டியாளர்களின் விவரம்:
சுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அலரி ஜோசப், லோக்கி ஃபெர்குசன், முகமது ஷாமி.









