இலங்கை மக்களுக்கு ராணுவம் வேண்டுகோள்

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் முன் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.…

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் முன் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அதிபர் மாளிகையையும் பிரதமர் வீட்டையும் ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்தையும் ஆக்கிரமித்தனர்.

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன.

பாதுகாப்புப் படையினர் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும், போராட்டக்காரர்கள் அவர்களை அலட்சியம் செய்துவிட்டு அதிபர், பிரதமர் இல்லங்களுக்குள் செல்வதும், பிரதமர் அலுவலகத்திற்குள் செல்வதுமான வீடியோக்கள் அந்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலையை அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் உரிய நடவடிக்கை எடுத்து நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று தற்காலிக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அடுத்து அமைய இருப்பது அரசு எதிர்க்கட்சிகளின் அரசு என்பதாலும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ராணுவத் தலைமைத் தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.