முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பு – வெலிக்கடை சிறைக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு உட்பட சிறைக்கைதிகளின் உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிறைக் கூரையில் கைதிகள்..

அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனும் இதில் பங்கேற்றார். வெலிக்கடை சிறையின் கூரை மீது ஏறி தங்கள் விடுதலைக்காக, கைதிகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த சிறைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இலங்கை காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி தெரிவித்ததை அடுத்து அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

Advertisement:
SHARE

Related posts

”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Jayapriya

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்தின் சிறப்பம்சங்கள்..

Ezhilarasan

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது?

Saravana