இலங்கை Vs நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது #Testmatch | வெற்றி யாருக்கு?

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த…

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட்டில் இலங்கை 63 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்நிலையில், 2வது மற்றும் கடைசி டெஸ்ட் அதே மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது. முதல் டெஸ்டில் தோற்றதால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த நியூசி. 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை அந்த இடத்தை பறித்துக் கொண்டது.

இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரிக்க தொடர் வெற்றிகள் கட்டாயம் என்ற நிலையில் உள்ளன. ஆப்கான் அணியுடன் நடக்க இருந்த டெஸ்ட் மழை காரணமாக ரத்தானது, இலங்கையுடனான தோல்வி நியூசிலாந்துக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. எனவே, 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்க நியூசி. தரப்பு வரிந்துகட்டுகிறது. அதே சமயம், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடுவது தனஞ்ஜெயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்கு குறி வைப்பதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.