இலங்கையில் பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
புனர்வாழ்வு நிலையத்தில் போலீஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இன்று காலை சுமார் 500-600 கைதிகள் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடுவது தொடர் கதையாகும் என்று அந்நாட்டில் அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.








