ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தொடங்கும் பணியை நிறுத்தவில்லை என ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி இரண்டாவது தவணை போடுவதற்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியானது. இதனால், வணிக ரீதியான ஸ்புட்னிக் வி தடுப்பூசி விற்பனை தாமதம் ஆகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“நாடு முழுவதும் முதல் கட்டமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி 50 நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக ஸ்புட்னிக் தடுப்பூசி விற்பனை வரும் வாரங்களில் தொடங்கப்படும். நாடு முழுவதும் ஸ்புட்னிக் கிடைக்கச் செய்வதற்காக ரெட்டி ஆய்வகம் நாடு முழுவதும் உள்ள முக்கியமான மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுகின்றோம். மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்ட ஸ்புனிக் தடுப்பூசிகள் வெற்றிகரமாக பலருக்கு போடப்பட்டுள்ளது.”
இவ்வாறு ரெட்டி ஆய்வகம் அறிக்கையில் கூறியுள்ளது.







