முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டி!

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் ஊராட்சி சார்பில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் ஊராட்சி சார்பில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இறுதி சுற்று படகு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் கானத்தூர் ரெட்டி குப்பம் அணியினர் முதலிடத்தையும், கோவளம் குப்பம் அணியினர் இரண்டாவது இடத்தையும், செம்மஞ்சேரி குப்பம் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ஒரு பைபர் படகும் அந்த படகில் சென்ற 4 வீரர்களுக்கு தலா 1 சவரன் தங்க சங்கிலியும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு, படகுக்கு பயன்படுத்தும் எஞ்சினும், மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு சிறிய படகும் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

— கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.