விமானங்கள் புறப்படுவதில் தாமதம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹேக் செய்யப்பட்டதா?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிணிகளை ஹேக்கர்கள் “ஹேக்” செய்ய முயன்றதால் இன்று காலை விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருட்களை (Software) ‘ஹேக்’ செய்யும் முயற்சி நேற்று இரவு நடைபெற்றது. இது ‘ரேன்சம்வேர்’…

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிணிகளை ஹேக்கர்கள் “ஹேக்” செய்ய முயன்றதால் இன்று காலை விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருட்களை (Software) ‘ஹேக்’ செய்யும் முயற்சி நேற்று இரவு நடைபெற்றது. இது ‘ரேன்சம்வேர்’ வகையிலான தாக்குதலாகும்.  “ரேன்சம்வேர்” தாக்குதல் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் சாஃப்ட்வேரைத் தாக்கி, கணிணிகளில் இருக்கும் முக்கியத் தகவல்களை ஹேக்கர்கள் முடக்கி வைத்து விடுவார்கள். பின்னர், அந்தத் தகவல்களை மீட்டெடுக்க தங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என ஹேக்கர்கள் கூறுவார்கள். இதனை சில நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாகவே சரிசெய்து விடும். சில நிறுவனங்கள் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து பிரச்னையை சரி செய்வார்கள்.

இந்த ரேன்சம்வேர் தாக்குதல் குறித்து தகவலறிந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஐ.டி. பிரிவினர் உடனடியாக செயல்பட்டு இந்த ஹேக்கிங் முயற்சியை முறியடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இன்று காலை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்ததும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தினர் துரிதமாக செயல்பட்டதால் இந்த ரேன்சம்வேர் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.